தமிழ்மொழிப் பற்றுள்ளோர்கள் அனைவருக்கும் நற்றமிழ் வணக்கம்!
ஓர் இனத்தின் அடையாளம் மொழியே! தமிழ்மொழியில் இளங்கலைப் பட்டப் படிப்பை (BA in Tamil) மேற்கொள்வதற்குத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. மூன்று ஆண்டுகள் கற்றுத் தேர்ச்சி பெறுவோர்க்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் பட்டய, மேற்பட்டய, பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இக் கற்கைநெறியூடாகத் தமிழர் தம் வரலாறு, இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றை மேலும் தெள்ளத்தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
தமிழ் உணர்வும் பற்றும் கொண்ட அனைவரும் எம் அமைப்பினூடாகத் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
இளங்கலைத் தமிழியல் பட்டப்படிப்பு – தொடர்புப்படிவம்
https://forms.gle/pBHXABDkrZMrnf5U8
தொடர்புகளுக்கு: தொடர்வுப்படிவம்:
திருமிகு. டினோஜன் கலாறஞ்சன்
பொறுப்பாளர்
தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை
தமிழ் இணையக் கல்விக்கழகம் – தொடர்புமையம் யேர்மனி
dinojanjan@gmail.com
tamilischeskulturforum@gmail.com
0049 176 41 786 252 – 0049 177 80 44 305
யேர்மனியில் தமிழில் ஆர்வமிக்க அனைவரும் படித்துப் பட்டயம், மேற்பட்டயம் பட்டம் பெற ஒரு அரிய வாய்ப்பு.