நிகழ்வுகள்

கல்க் விழா2023 – Kalkfest 2023

19.08.2023 அன்று கேளின் கல்க் நகரில் குமுகாய ஒருங்கிணைப்புக் குழுவும் (Sozialraumkoordination Kalk) பிற அமைப்புகளும் இணைந்து ”கல்க் விழாவை” நிகழ்த்தியது. தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை கேளின் தமிழாலய உறவுகளை ஒன்றுசேர்த்து, அவ்விழாவில் தமிழரின் இன்றைய சிற்றுண்டி வகைகளை கல்க் நகர்வாழ் மக்களுக்கு வழங்கியது.

அத்துடன், தமிழ் மொழியின் பெருமையையும் வரலாற்றையும் கேளின் தமிழாலய ஆசிரியர்களும் மாணவர்களும் பிற நாட்டவருக்கு அழகாகவும் தெளிவாகவும் விளங்கப்படுத்தினர்.

இவ்விழாவைச் சிறப்பாகச் செய்ய உணவுகளை வழங்கிய பெற்றோர்களுக்கும் கூடாரத்தில் நின்று உணவுகளைப் பரிமாறிய மாணவிகளுக்கும் மற்றும் இவ்விழாவை ஒழுங்கமைத்த குழுவிற்கும் எமது நன்றிகள்!

Am 19.08.2023 veranstaltete die Sozialraumkoordination Kalk in Zusammenarbeit mit einer Planungsgruppe das Kalkfest. 

Das Tamilische Kulturforum e.V. in Köln in Zusammenarbeit mit der tamilischen Schule – Köln präsentierten den Gästen im Stadtteil Kalk tamilisches Fingerfood.

Des weiteren haben die Lehrkräfte und Schüler*Innen den Gästen die tamilischen Buchstaben und die Geschichte der Tamilen näher bringen können.

Vielen Dank an die Eltern, die mit Essensspenden zum Gelingen der Veranstaltung beigetragen haben. Unser Dank gilt aber auch den Schülern*innen, die im Pavillon standen und Essen servierten!

Wir bedanken uns auch bei den Veranstaltungsorganisatoren, die uns die Möglichkeit gegeben haben, unsere Kultur zu präsentieren.