எமது தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை கேளின் மாநகரில் பதியப்பட்ட ஓர் அமைப்பு. தமிழராய் நாம் வாழ்வதற்கு எமது மொழியும் பண்பாடும் மிகவும் அகத்தியமானவை. அவற்றைப் புலத்தில் வாழும் அனைவருக்கும் கொடுக்கும் நோக்குடன் இப்பேரவை இயங்குகிறது. இப்பக்கத்தில் எங்களது சட்ட திட்டங்களை இணைத்துள்ளோம்.
மொழி
ஓர் இனத்தின் அடையாளம் மொழி. மொழியை இழந்தோமானால் எம்மினமும் அழிந்து விடும். எனவே, எம் தாய்மொழி தமிழைத் தெளிவுறக் கற்கப் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயற்படவுள்ளோம். குறிப்பாகத் தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளைத் தொடங்க எண்ணியுள்ளோம்.
பண்பாடு
ஒவ்வோர் இனமும் தனக்கென சிறப்பான பண்பாட்டைக் கொண்டுள்ளது. அதுபோல, பண்பாட்டால் உயர்ந்த இனம் தமிழினம். உணவு, உடை, உறையுள் எனப் பண்பாட்டுக் கூறுகளின் தனிச் சிறப்புகளைக் கொண்ட தமிழரின் பண்பாட்டைப் புலத்திலும் வளர்த்தெடுப்பதற்கு முயல்வது எம்கடனே!
சமயம்
புலத்தில் இறையன்பைத் தமிழில் வளர்ப்பது சிறப்பாகும். இறையன்பின் ஊடாகவே தமிழும் மேன்னோக்கி வளரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எமது மொழியால் இறைவனை வழிபட்டுத் தமிழைத் தரணியில் உயர்த்துவோம். தமிழா தமிழில் வழிபடு!