தமிழர் திருநாள் / Tamilisches Fest 2024
20.01.2024 அன்று தமிழர் திருநாளாம் தைத்திருநாளைத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையும் கேளின் தமிழாலயமும் இணைந்து மிகவும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தது. அத்துடன் எமது மாணவச் செல்வங்கள் தாங்கள் கற்றவற்றைத் தெளிவுறத் தமிழிலும் வாழிடமொழியிலும் விளங்கப்படுத்தி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர். தைப்பொங்கல் நிகழ்வைக் காட்சிப்படுத்தியதோடு நின்றுவிடாது, அவற்றுக்கான அறிவியற் கருத்துகளை வந்தோருக்கும் திரு தங்கரத்தினராசா அவர்கள் கூறினார்.
Am 20.01.2024 veranstalteten wir zusammen mit der Tamilischen Schule Köln ein erfolgreiches Tamilisches Fest. In Tamil und Deutsch stellten die Schülerinnen und Schüler der Tamilischen Schule Köln ihre Aufstellung vor. Herr Thangarathnaraja stellte das Pongalfest vor und erklärte, was die Pongalzeremonie für die Wissenschaft bedeute.












ஆண்டு 1 முதல் 5 வரையிலான மாணவர்கள் தானியவகைகளையும் மரக்கறிவகைகளையும் கமழ்வுப்பொருள்களையும் (வாசனைப்பொருள்கள்) காட்சிப்படுத்தினர்.
Das tamilische Getreide, die Gewürze und das Gemüse wurden den ersten bis fünften Schülern vorgestellt.


ஆண்டு 6 முதல் 8 வரையிலான மாணவர்கள் கற்பகதருவாம் பனையின் பயன்பாட்டைச் சிறப்பாக விளக்கங்கள் கொடுத்துக் காட்சிப்படுத்தினர்.
Die Produkte des Palmenbaumes wurden den Sechst- bis Achtklässlern gezeigt und sie erklärten ihre Verwendungsmöglichkeiten.

ஆண்டு 9 முதல் 12 வரையிலான மாணவர்கள் ஈழத்தமிழர் தம் வரலாற்றைக் குமரிமுதல் இனவழிப்புக் காலம் வரை எம் மண்ணில் நிகழ்ந்தவற்றை இனவுணர்வுடன் தமிழ்மொழியிலும் வாழிடமொழியிலும் சிறப்புற விளக்கம் தந்து காட்சிப்படுத்தினர்.
Unsere Geschichte von Kumarikandam bis zum Völkermord des Tamileelam wurde den Schülern der neunten bis zwölften Klasse vorgetragen.


மாணவர்கள் மொழியாற்றலுடன் வாழிடமொழியில் தத்தம் செயற்றிறனால் விளக்கியது எல்லோரையும் மகிழ்வித்தது. இவர்களின் செயற்பாட்டால் தமிழையும் ஈழத்தமிழர் வரலாற்றையும் உணர்வையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வார்கள் என்பதில் எமக்கு ஐயமேயில்லை.
கேளின் நகரில் பல்துறையில் பயணிக்கும் வாழிடத்தோர் எம் பண்பாட்டையும் விருந்தோம்பலையும் மாணவர்களின் சிறந்த செயற்பாட்டையும் பெருமைப்படுத்தி வாழ்த்தி மகிழ்ந்தனர். விழாவிற்கு வருகைதந்தோர், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து மகிழ்கின்றது.
Alles, was heute geschah, wurde von den Schülern allein mit ihren Kenntnissen und Fähigkeiten gemacht. Vielen Dank an unsere Gäste.